Thursday, July 30, 2009

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்


பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

ஞாயிற்றுகிழமை

தள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

Wednesday, July 29, 2009

ஸ்ரீ கால பைரவர்

காசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

Tuesday, July 28, 2009

ஸ்ரீ பைரவர் வரலாறு

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.

Monday, July 27, 2009

சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி

நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்

நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
  1. சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
  2. சந்திரன் கபால பைரவர் இந்திராணி
  3. செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
  4. புதன் உன்மத்த பைரவர் வராகி
  5. குரு அசிதாங்க பைரவர் பிராமகி
  6. சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
  7. சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
  8. ராகு சம்கார பைரவர் சண்டிகை
  9. கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி

Bairavar Vazhibaadu - பைரவர் வழிபாடு கைமேல் பலன்

ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல


நன்மைகளும் கிடைக்கும் !!!!

தியானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

ஹஸ்தே சூலகபால பாச டமரும்

லோகஸ்ய ரக்ஷா கரம்

நிர்வாணம் ஸுநவாகனம்

திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்

வந்தே பூத பிசாச நாதவடுகம்

ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .


பைரவ காயத்ரி


ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே |

ஸ்வாந வாஹாய தீமஹி|

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

பைரவர் அவதாரங்கள்


இரட்டை முக பைரவர்



அஷ்ட பைரவர் ஸ்தலங்களை இனி வரும் போஸ்ட் எல்லாவற்றிலும் பார்க்கலாம். அனைவரும் பைரவர் அருள் பெற வேண்டுகிறேன்