Thursday, March 31, 2011


பைரவர் மூலமந்திரப் பலன்கள்

- கோவர்தன்
natpu
மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும்   உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு

வ. எண்  நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்

2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்

3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்

திருவண்ணாமலை
4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்

திருக்கண்டியூர்
5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்

6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்

7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி

8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்

9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி

10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்

11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்

12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி


13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்

14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி

15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை

16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்

17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்

18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை

19.மூலம்சட்டைநாதர்சீர்காழி

20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்

21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்


22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)

23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி


24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்

25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை
 தஞ்சாவூர்

26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்


27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை


மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

மூல மந்திரம் :

ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

natpu
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு.....
ஸ்ரீ ஜெயதுர்கா நெய் ஸ்டோர்
எண். 54, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4. செல் : 98841 15342,




Wednesday, March 30, 2011


சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.

  • பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குபைரவர்என்பது பெயராயிற்று.

  • பைரவருக்கு க்ஷேத்திர பாலக மூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. க்ஷேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

  • பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும், மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

  • காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.

  • தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் 
  • காணப்படுகிறார்.

  • பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

  • அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

  • பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.

நன்றி!!! 

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில்  வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பௌர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக  பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம். வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பௌர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென  வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே  வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும்  தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்


நன்றி!!!

Friday, March 11, 2011

ஸ்ரீ சாம்பிராணி வாசகர் 
வேலங்குடி , கண்டவராயன் பட்டி வழி, திருப்பத்தூர் , சிவகங்கை மாவட்டம் 
(SHREE SAMBURANI VASAGAR @ SAMBURANI KARUPPAR, VELANGUDI, KANDAVARAYANPATTI VIA, THIRUPPATTUR, SIVAGANGAI DISTRICT)




இந்த கோவில் வேலங்குடியை சுற்றியுள்ள பதினெட்டு பட்டிகளுக்கும் பாத்தியப்பட்ட கோவில் .  மஹா சிவராத்திரி முடிந்து வரும் அம்மாவாசை முதல் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும் .  இந்த கோவில் திருவிழா வை முன்னிட்டு திருப்பத்தூர் மற்றும் பொன்னமராவதி இலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .   


இந்த கோவிலில் உருவ வழிபாடு கிடையாது .  ஸ்ரீ சாம்பிராணி வாசகர் என்றும் சாம்பிராணி கருப்பர் என்றும் அழைப்பர் .  திருவிழாவின் போது கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் . 



 கருப்பர் சன்னதிக்கு எதிரில் சாம்பிராணி தட்டு எப்பொழுதும் இருக்கும் .  பக்கதர்கள் அனைவரும் கருப்பருக்கு சாம்பிராணி வாங்கிவது போடுவது வழக்கம் .  
இங்குள்ள கருப்பருக்கு கிடா மற்றும்  கோழி வெட்டுவது இல்லை .  மாறாக அருவாள் மட்டும் புதிதாக செய்து கருப்பர் கோவிலுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது .  



இந்த அருவாள் அருகில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து எடுத்துவந்து கருப்பருக்கு படைப்பர் .  
மற்றும் கருப்பருக்கு கரும்பும் நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது .  

இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் அருவாள்கள் சன்னதிக்கு பின்புறமுள்ள மண்டபத்தில் பாதுகாக்கப்படுகிறது .  


பின்புறமுள்ள மண்டபத்தின் மேற்குபுரத்தில் நடுவில் உள்ள தூணில் தெற்கு திசையை பார்த்தபடி பைரவர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது .


நன்றி மீண்டும் சந்திப்போம்!!!








Monday, March 7, 2011


அருள்மிகு ஆண்டப்பிள்ளை நாயனார் 
பைரவ மூர்த்தி  திருக்கோயில்


பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, திருப்பத்தூர் , சிவகங்கை மாவட்டம் 


இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்



இங்குள்ள  பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார்.



காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார்


இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.
வன்னி, கிணறு, லிங்கம்: அம்பாள் சமீபவல்லிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.


இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் லிங்கமாக இருந்து சாட்சி சொன்னார்.



மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது.







இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது.

அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு லிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் லிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார்.
வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, "சுகந்தவனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.



இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள். 

நன்றி மீண்டும் சந்திப்போம்