Friday, March 11, 2011

ஸ்ரீ சாம்பிராணி வாசகர் 
வேலங்குடி , கண்டவராயன் பட்டி வழி, திருப்பத்தூர் , சிவகங்கை மாவட்டம் 
(SHREE SAMBURANI VASAGAR @ SAMBURANI KARUPPAR, VELANGUDI, KANDAVARAYANPATTI VIA, THIRUPPATTUR, SIVAGANGAI DISTRICT)




இந்த கோவில் வேலங்குடியை சுற்றியுள்ள பதினெட்டு பட்டிகளுக்கும் பாத்தியப்பட்ட கோவில் .  மஹா சிவராத்திரி முடிந்து வரும் அம்மாவாசை முதல் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும் .  இந்த கோவில் திருவிழா வை முன்னிட்டு திருப்பத்தூர் மற்றும் பொன்னமராவதி இலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .   


இந்த கோவிலில் உருவ வழிபாடு கிடையாது .  ஸ்ரீ சாம்பிராணி வாசகர் என்றும் சாம்பிராணி கருப்பர் என்றும் அழைப்பர் .  திருவிழாவின் போது கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் . 



 கருப்பர் சன்னதிக்கு எதிரில் சாம்பிராணி தட்டு எப்பொழுதும் இருக்கும் .  பக்கதர்கள் அனைவரும் கருப்பருக்கு சாம்பிராணி வாங்கிவது போடுவது வழக்கம் .  
இங்குள்ள கருப்பருக்கு கிடா மற்றும்  கோழி வெட்டுவது இல்லை .  மாறாக அருவாள் மட்டும் புதிதாக செய்து கருப்பர் கோவிலுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது .  



இந்த அருவாள் அருகில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து எடுத்துவந்து கருப்பருக்கு படைப்பர் .  
மற்றும் கருப்பருக்கு கரும்பும் நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது .  

இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் அருவாள்கள் சன்னதிக்கு பின்புறமுள்ள மண்டபத்தில் பாதுகாக்கப்படுகிறது .  


பின்புறமுள்ள மண்டபத்தின் மேற்குபுரத்தில் நடுவில் உள்ள தூணில் தெற்கு திசையை பார்த்தபடி பைரவர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது .


நன்றி மீண்டும் சந்திப்போம்!!!








No comments: