Tuesday, September 27, 2011

பைரவ அஷ்டகம்


கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்|
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்||
கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்|
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥||
ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்|
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி||
ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்|
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்||
கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்|
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி||

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
தனந்தரும் வயிரவன் தளிரடி
பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்
வந்து விடும்சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)
வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)
முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (3)
நான்மறை ஓதுவார் நடுவினில்
இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)
பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (5)
பொழில்களில் மணப்பான் பூசைகள்
ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (6)
சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)
ஜெய ஜெய வடுக நாதனே
சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (8)

பெண்கள் சொல்லவேண்டிய காயத்ரி,
யோ தேவஸ் ஸவிதாஸ்மாஹம் தியோதர்மாதி கோசராஹா!
ப்ரேரயேத் தஸ்ய பர்கஸ் தத்வரேண்ய முபாஸ்மஹே!!

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

Monday, September 26, 2011

தகட்‌டூ‌ர்‌ பை‌ரவர்‌



இங்கு பை‌ரவர்‌தா‌ன்‌ மூ‌லவரா‌க இருந்‌து அருள்‌ பலி‌க்‌கி‌றா‌ர்‌‌. உற்‌சவரா‌க சட்‌டை‌நா‌தர்‌. 500- 1000 வருடங்‌களுக்‌கு முன்‌ உள்‌ள பழமைவா‌ய்‌ந்‌த இடம்‌. கா‌லை‌ ஆறு மணி‌ முதல்‌ பதி‌னோ‌ரு மணி‌வரை‌, மா‌லை‌ நா‌லு மணி‌ முதல்‌ எட்‌டு மணி‌வரை‌ தி‌றந்‌தி‌ருக்‌கும்‌.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெ‌ருமை‌:
இந்‌த கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

பைரவர் பிறப்பு:
அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட் டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத் துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்: 
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.

பெயர்க்காரணம்: 
இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

தல வரலாறு:

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

நன்றி ! http://balandiary.blogspot.com

Thursday, September 15, 2011

தண்டபாணி பைரவர் 




காசிக்குப்போயும் பாவம் தொலையலியே !
காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.
காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது
மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா!
குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.
""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.
ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.
ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.

நன்றி! http://www.gaanam.net

Tuesday, September 13, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!



சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.

கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்
கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

Monday, September 12, 2011

உலகில் மிக உயரமான கால பைரவர்


எனக்குத் தெரிந்தவரை உலகில் மிக உயரமான கால பைரவர் இவர் தான் இவர் பற்றிய குறிப்புகள் இருந்தால் அன்பர்கள் அனுப்ப வேண்டுகிறேன்.  என்னுடைய
ஈமெயில் முகவரி gsethuanandh@gmail.com

நன்றி !      

Sunday, September 4, 2011

அருள்மிகு கால பைரவமூர்த்தி திருக்கோவில், தூர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

கால பைரவர் இக்கோயிலில் தனிசன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் உபயம் இருந்தால் இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் யாகம் நடத்தப்படும். இவருக்கு பசு நெய்யால் செய்த வடை மாலை சாத்தப்படுகிறது. இதை இப்பகுதியிலேயே செய்து தருகிறார்கள். கட்டணம் ரூ.300. கார்த்திகையில் நடக்கும் சம்பகசூரசஷ்டி விழாவின்போது ஆறு நாட்களும் பைரவர் பவனி வருகிறார். அப்போது மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது. பைரவர் இங்கு பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இக்கோயில், "பைரவர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.


கால பைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை. சிவன், அம்பாள் சன்னதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை. இதற்கு காரணம் இருக்கிறது.

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இக்கோயிலுக்கு வந்தபோது, அவரது அமைச்சர் கோயில் மரபை மாற்றி, மன்னருக்கு முதல் தீபாராதனையை காட்டச்செய்தார். மேலும் சந்தனம், குங்குமத்தையும் பிரசாதமாக தரச்செய்தார். மன்னர் கோயிலைவிட்டு வெளியேறியபோது, வழியில் தீபாராதனையை தொட்டு வைத்த கண்ணிலும், சந்தனம் வைத்த நெற்றியிலும் வெண் புள்ளிகளுடன் குஷ்டநோய் உண்டானது. மன்னர் கலங்கிப்போய் பைரவர் முன்பு வந்து, அறியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினார். அவரது குஷ்ட நோய் தீர்ந்தது.

மதுரையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 85 கி.மீ., தூரத்தில் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து ராங்கியம் செல்லும் வழியில் 9 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். திருமயத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதி உண்டு. இவ்வூரை "மேல தூர்மா' என்று சொன்னால்தான் உள்ளூர் மக்களுக்கு தெரிகிறது.

தற்பொழுது இந்த கோவிலில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருகின்றன.  நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் கோவில் குருக்களை அணுகலாம் 

திரு C.T. சுப்ரமணியன் @ மூர்த்தி அவர்கள் 

+91- 4333 - 276 412, 276 467, 94427 62219.


நன்றி !   தினமலர் & படங்கள் திரு K. கண்ணன் மற்றும் நிஷாந்த் 


Friday, September 2, 2011

திருமணத் தடை அகலும்



ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர். கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.

Thursday, September 1, 2011

காலச்சக்கரத்தின் அதிபதி பைரவர்



காலச்சக்ரதாரி: காலச்சக்கரத்தின் அதிபதியான பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

பைரவ வழிபாடு: பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்தி நிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.