Friday, January 27, 2012


ஸ்ரீ பைரவர் சிவனது  அம்சமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவ அம்சம் அதி முக்கியமானது. பைரவர் என்னும் சொல் பயத்தை நீக்குபவர். அடியார்களின் பாபத்தை உண்டு நீக்குபவர். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து  இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற  பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில் தனது சூல நுனியினால் தொட்டு உடன் நீக்கி காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.
 
படைத்தலை உடுக்கையும், காத்தலை கையில் உள்ள கபாலமும், ஒடுக்குதலை உடலில் பூசிய விபூதி பஸ்பமும், திரிசூலம் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே ஆனந்த பைரவராக உலகை படைக்கின்றார். பின்பு காலபைரவராக உலகை காக்கின்றார். அடுத்து காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.
 
எவ்வித ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாமல் இக்கட்டான காலத்தில் அவரை ஒரு  முகமாக மனதில் எண்ணினாலே போதும் மனதுடன் தொடர்புடைய ஆகாச பைரவர், உடனே செயல்பட்டு  ஆபத்து  காலத்தில் நம்மை காப்பாற்றுவார். ஸ்ரீ பைரவரைப் பற்றி ருக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும், விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகாசி காண்டத்தில் ஸ்ரீ பைரவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
திருக்கோவில் நடை திறப்பதற்கு முன் கால பைரவருக்கு அதிகாலை பூஜை  வழிபாடு செய்து  சாவியை அவரிடமிருந்துதான் பெற்று நடை திறக்கப்படும். இரவு நடை சாத்திய பிறகு பைரவர் பூஜை செய்து  பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு பைரவர் காலில் திருக்கோவில் ஒப்படைத்து விட்டுதான் செல்வார்கள்.
 
பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்கி பயத்தை உண்டு பண்ணுபவராகவும் காட்சியளிக்கின்றார்.

நன்றி ! மாலை மலர் !!

Thursday, January 26, 2012


பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பூட்டி அந்த சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோவிலை பூட்டுவது மரபு.

இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் சேத்திர பாலகர் என்று கூறுவர். சனீஸ்வரருக்கு குருவாகவும், அதிதெய்வமாகவும் விளங்குபவர் பைரவர். பைரவர் உருவங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது கால பைரவர் திருவுருவம் ஆகும். பைரவரில் 64 அம்சங்கள் உடைய திருவுருவங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி.

அவர் மேலும் கூறியதாவது:-

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதேபோன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும்.

மேலும் அந்த கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீபைரவர்தான். சிவபெருமான் அஷ்டமூர்த்தங்களாகிய பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டிலும் நீங்காது நின்று அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இவர்களுக்கு தேவியராகத் திகழ்பவர்கள் அஷ்டமாதர்கள் ஆவர்.

இவர்களின் பெயர் முறையே பிரம்மஹி, மகேஸ்வரி, கொளமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்பதாகும். இவர்கள் அந்தாசூர வதத்தின் பொருட்டுச் சிவபெருமானால் தேவர்களின் சக்தியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள்.

பின்னர் அஷ்ட பைரவர்களுக்குத் தேவியராக அளிக்கப்பட்டவர்கள். சீர்காழி, பிரம்மபுரீசுவரர் ஆலயத்தின் (தெற்கு) வெளிப்பிரகாரத்தில் வலம்புரி மண்டபம் என்ற சந்நிதியுள்ளது. இங்கு எட்டு பைரவர்களுக்கும் திருவுருவங்கள் அமைத்து வழிபடப்படுகின்றது.

இந்த நிலையைப் பிற தலங்களில் காண முடியவில்லை. அஷ்ட பைரவர்களின் திருவுருவ வர்ணனைகளை சாரஸ்வதீயம், ரூப மண்டனம், ஸ்ரீதத்துவ நிதி முதலிய நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

நன்றி !  மாலைமலர் !!

Wednesday, January 25, 2012


உலகிலேயே முதன் முறையாக சுவர்ணஹர்சன பைரவருக்கு என்று தனிப் பெரும் ஆலயம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் 33 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை அமைக்கப்படுவது விஷேசமான ஒன்று. இங்குள்ள பைரவரை வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் தங்க-வைர நகைகள் பெருகும்.

கடன் தொல்லை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நஷ்டம் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். மாணவ-மாணவிகள் ஞாபக சக்தியைப் பெற்று படிப்பில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் நல்ல விளைச்சல் பெறுவர்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் திறமைப்பெற்று அடிமைத் தனத்தில் இருந்து விடுபடுவர். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் பைரவர் அருளுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பெற்று சண்டை சச்சரவின்றி நிம்மதியாக வாழ்வர். இங்குள்ள சுவர்ணா கர்சனா பைரவரை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி நினைத்த காரியம் பலிக்கும்.

சகல தோஷங்களை நீக்குவதில் சுவர்ணா கர்சனா பைரவருக்கு நிகர் அவரே! இக்கோவில் கட்ட நிதி தருபவர்களுக்காக இங்கு நடைபெறும் சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகளின் போது, அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பு யாகங்கள் செய்யப்படுகிறது. சுவர்ன ஹர்சன பைரவர் கோவில் உலகின் ஒரு அதிசய கோவில் மட்டுமின்றி, மாபெரும் புனித ஸ்தலமாக மாறுவது உறுதி என்கிறார்விஜய்சுவாமிஜி.

நன்றி !  மாலைமலர் !!


Tuesday, January 24, 2012


இத்தகைய ஸ்லோகங்களை தினமும் சொல்வதால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்லோகங்கள்.

ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பூரண பலன் கிட்டும்.

1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் வழிபட வேண்டும்.

3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக மிக அவசியம்.

4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் கிடைப்பது உறுதி.

5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து அதன் படி செல்லி வர வேண்டும்.


ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்


ஸ்ரீ பைரவ த்யானம் ::

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

Monday, January 23, 2012


தை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்றும், சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் பைரவக் கடவுளுக்கு உகந்த நாளாகும்.


தினசரிக் கடமைகளை முடித்து பைரவக் கடவுளை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு பொழுது மட்டும் இரவில் உணவு அருந்தி, மறுநாள் காலை தினசரிக்கடமைகளை முடித்து ஆலயம் சென்று வழிபடல் வேண்டும். அடியவர்களுக்கு அன்னதானம் அளித்தலும் வேண்டும்.


இவ்விரதத்தினைக் கடைபிடிப்பவர்கள் முக்தி அடைவர்.

Sunday, January 22, 2012


ஸ்ரீ பைரவர் சிவனது  அம்சமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவ அம்சம் அதிமுக்கியமானது. பைரவர் என்னும் சொல் பயத்தை நீக்குபவர். அடியார்களின் பாபத்தை நீக்குபவர். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து  இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற  பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில் தனது சூல நுனியினால் தொட்டு உடன் நீக்கி காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.

படைத்தலை உடுக்கையும், காத்தலை கையில் உள்ள கபாலமும், ஒடுக்குதலை உடலில் பூசிய விபூதி பஸ்பமும், திரிசூலம் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே ஆனந்த பைரவராக உலகை படைக்கின்றார். பின்பு காலபைரவராக உலகை காக்கின்றார். அடுத்து காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.

எவ்வித ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாமல் இக்கட்டான காலத்தில் அவரை ஒரு  முகமாக மனதில் எண்ணினாலே போதும் மனதுடன் தொடர்புடைய ஆகாச பைரவர், உடனே செயல்பட்டு  ஆபத்து  காலத்தில் நம்மை காப்பாற்றுவார். ஸ்ரீ பைரவரைப் பற்றி ருக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும், விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீகாசி காண்டத்தில் ஸ்ரீ பைரவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. திருக்கோவில் நடை திறப்பதற்கு முன் கால பைரவருக்கு அதிகாலை பூஜை  வழிபாடு செய்து  சாவியை அவரிடமிருந்துதான் பெற்று நடை திறக்கப்படும். இரவு நடை சாத்திய பிறகு பைரவர் பூஜை செய்து  பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு பைரவர் காலில் திருக்கோவில் ஒப்படைத்து விட்டுதான் செல்வார்கள்.

பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்குபவராகவும் காட்சியளிக்கின்றார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

பைரவர் ஆட்சி செய்யும் காசி நகரம்......

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது.

காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார். சீர்காழியில் பைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அபிஷேகம், கூரையிலுள்ள பைரவரின் நேர்ப்பார்வையில் கீழே உள்ள பலிபீடத்திற்கு அபிஷேகம்,பால், பஞ்சாமிர்தம், தயிர் எல்லா வாசனை திரவியங்களுடன் அபிஷேகம், பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

உத்ஸவருக்கு முத்துச்சட்டை நாதர் என்று பெயர். பலிபீடத்திற்கு அபிஷேக ஆராதனை முடிந்து பிறகு படியேறி மேலே சட்டை நாதருக்குப் புனுகுச் சட்டம் சாற்றி வடை மாலை சாற்றுவார்கள். இந்த ஆலயத்தில் நவக்கிரஹ தேவதைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்பது அதிசயமாகும். ஈஸ்வரனும், ஈஸ்வரியும், பெரிய திருமேனியுடன் புன்னகை பூத்த திருமுகத்துடன் வீற்றியிருப்பதும், இந்த ஆலயத்தில் காணலாம்.

மற்றும் அஷ்ட பைரவர்களும்,ப்ரதிஷ்டை செய்து ஒரே சமயத்தில் பார்க்ககிடைப்பதும் தோணியப்பர் ஆலயத்தின், பெருமைக்கு ஒரு சான்று. காலத்திற்கு அதிபதியான கால பைரவரை நல்ல நியமத்துடன் வழிபட்டால், மனோ தைரியமும், சாந்தியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

பிரம்மாவுக்கும், சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் இருவரும் ஓருவராக எண்ணி, சிவபெருமானைவிட தானே உயர்ந்தவர் என்ற  செருக்குடன் பிரம்மா செயல்பட்டு வந்த போது, தேவர்கள், ரிஷிகளும் படைப்பு தொழிலை தொழிலாக செய்து  வரும் பிரம்மாவின் செய்கையால் பயந்து ஒடுங்கி சிவனிடம் முறையிடவே சிவபெருமானின் உடல் சக்தி பைரவர் சக்தியாக வெளியாகி பிரம்மாவின் ஐந்து சிரசில் நடுச்சிரசை  கிள்ளி எறிந்த தேவர்கள் ரிஷிகளின் பயத்தை போக்கும் பிரம்ம கண்டீஸ்வரராக (திருக்கண்டியூர்) எழுந்தருள்கின்றார்

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது.

காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர். காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும், ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருதகாலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட்பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்டபைரவரும் அஷ்டதிக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும்போது எமனும் திரும்பிபோவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய "காசி கால பைர வாஷ்டகம்'' துதி பாடி வழிபடும்போது எமபயம் நீங்குகிறது. காசி கறுப்பு கயிறு அணியும்போது ஆயுள் விருத்தியாகிறது. எமபயம் நீங்க, எமவாதனை நீங்க காசி கால பைரவாஷ்டகத்துடன் காசி கறுப்பு கயிறு அணிந்து வளம்பெறுவோம்.

சனிபகவானுக்கு கிரக பதவி.....

சூரியன் மகனான சனீசுவரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு, கவுரவக்குறைவை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரையின் படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப்பதவி கிடைக்கப் பெற்றார். பைரவர் சனீசுவர பகவானுக்கு குருவாக விளங்கி அருள் பாலிக்கின்றார்.  

சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்....

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் சிற்சபையில் சிதம்பர ரகசியத்தில் கீழே ஒரு அடி உயரத்தில் தங்கத்திலான லிங்கம் ஒன்றுள்ளது. இந்த ஏகமுகலிங்கத்திற்கு உச்சிவேளையில் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படும். மற்றபடி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், ஸ்ரீகைலாயத்திலிருந்து கொண்டுவந்த 5 லிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்திற்கே ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த லிங்கத்திற்கு  அருகில் காவலுக்கு ஸ்வர்ண பைரவ சிலை உள்ளது. இவருக்கு அதிகாலை அர்த்தசாம பூஜையின் முடிவில் வில்வம் சொர்ணமாக மாறியதாகவும், இதனால் இவருக்கு சொர்ண கால பைரவராக திகழ்கின்றார். சிதம்பரம் தீட்சிதர்கள் கூறும் சொர்ணகால பைரவ மந்திரத்தை நாளும் கூறி வழிபடுவோம்.

சிதம்பரம் ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம்,

"ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்
வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம்
ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''.

நன்றி ! மாலை மலர் 

Friday, January 20, 2012

பிரதான வயிலை அடுத்து எல்லா மண்டபங்களுக்கும் வெளியே வடகிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் பைரவர்  கோவில் இடம்பெறும். பைரவருக்கு ஷேத்ரபாலகர் எனும் பெயரும் உண்டு ( as aforesaid ), பைரவர் கோவிற்காவலாளியும் ஆவார்.

தக்கன் வேள்வியின்போது அவன் சிவனை அழையாது அவமதித்ததன் காரணமாக தேவி உமையவள் யோகாக்னியில் தன்னுடல் நீத்து தாட்சாயனி எனும் நிலையினின்று நீத்து பார்வதியாக இதையறிந்த சிவன் கோபங்கொண்டு வீரபத்திரமூர்த்தியாகி, யாகம் நடக்குமிடம் சென்று தக்கன் தலை கொய்தார். பைரவரைப் போல வீரபத்திரரையும் சிவனின் மகனாக வழங்கும் முறையும் உண்டென்பதை முன்பே கூறியிருந்தோம்.




பைரவ அஷ்டகம் : -

த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம  ராகப்ரபம் சுபம்.

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - ஒன்று : -

பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்.

பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு " கபாலி " எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - இரண்டு : -

இறைவன்,பிரமனிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப் பணித்ததான வரலாறும் உண்டு. சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி " என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால், " முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு " என அருளினார் ஈசன். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அடிப்படைத் தோற்றங்கள் :-

பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்களிலும் கோரப் பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபால மாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத்தோலாடை ஆகியன பைரவமூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடையெதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் வடிக்கப்படுவர்.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவாறு நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படைத் தோற்றங்களின் விரிவு. இவ்வெட்டுவகை மூல பைரவர்கள்,

1.அசிதாங்க பைரவர்
2.ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோத பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்

என்பனவர்களாம்.


நன்றி! சிறகடிக்கும் மனசு !!!