-
- திருப்போரூர் அடுத்துள்ளது வெண்பேடு ஊராட்சி. இங்குள்ள காட்டூரில், பழமையான கால பைரவர் கோவில், 300 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்து உள்ளது. குடிநீர் வசதி இல்லை, பொதுவாக சிவன் -முருகன் கோவில்களில் வெளிபிரகாரத்தில் பைரவர் கோவில்கள் இருக்கும். மாறாக இங்கு தனிகோவிலாக, கால பைரவர் கோவில் உள்ளது. கிராமத்தினர் தீவிர முயற்சியில், 10 அடி இடைவெளியோடு படிக்கட்டுகளும், அதை கடக்க சாய்தள பாதையும் அமைத்துள்ளனர். ஆனால், பைரவர் கோவில் மீது முட்செடிகள் வளர்ந்துள்ளன. அருகில் உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.கோவிலின் எதிரில் ஏராளமான கருங்கற்களால் ஆன, யானைகள் திறந்த வெளியில் கிடக்கின்றன. கோவில் நித்ய பூஜையினை கங்காதரன், 70. என்பவர் மேற்கொண்டு வருகிறார். கோவில் சிறப்பு குறித்து கங்காதரன் கூறியதாவது, "சுற்று வட்டாரத்தில் தனித்தன்மையுடன், பைரவர் கோவில் உள்ளது. அஷ்டமி நாளில் பைரவரை வழிபட்டால், தீராத கவலை நீங்கும். தினசரி மாலை 3:00 மணி முதல், 5:00 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். விசேஷ நாளில் சுவாமிக்கு வடைமாலை சாத்துகிறோம். மலை மீது குடிநீர் வசதி இல்லை. வரலாற்று சிறப்புமிக்க கோவிலை சீரமைக்கவும், எளிதில் பக்தர்கள் மலையோர வசதியாக படிக்கட்டுகள் அமைக்கவும், ஆன்மிக அன்பர்களும், அறநிலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.
- நன்றி ! தினகரன்
- பைரவர் அருள் ! இதனைப்படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ............ உங்களால் இந்த கோவிலுக்கு செல்ல முடிந்தால் சென்றுவிட்டு , உங்களால் முடிந்த சில திருப்பணிகளை செய்து பைரவர் அருளைப் பெற்றிடுங்கள். சென்னைக்கு அருகில் பைரவருக்கென்று ஒரு தனி ஸ்தலம் இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமே !
- நன்றி !
Tuesday, April 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment