காலனின் பயத்தைப் போக்குபவர், எமனின் பயத்திலிருந்து நம்மைக் காப்பவர் - காலபைரவர் ஆவார். இவரும் பரமேஸ்வரனின் அம்சமே எனக்கூறும் வரலாறும் உண்டு அதாவது பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமனின் கபாலம் பிரம்மஹத்தியாக பைரவரின் கரத்தைப் பற்றிக்கொண்டது, கூடவே பசி, தாகமும் பற்றிக்கொண்டது. உண்ணவும் முடியாமல், பசியைத் தாஙகவும் முடியாமல் பல ஷேத்திரங்கள் சுற்றித் திரிந்த பைரவர் கடைசியில் காசி வந்தபோது அன்னபூரணி இட்ட அன்னப் பிட்சையால் பசி விலகியதோடு பிரமனின் கபாலமும் விலகியது. அன்றுமுதல் காசியிலேயே கால பைரவர் எனும் திருப்பெயரோடு ஷேத்ரபாலகராக, காக்கும் தெய்வமாக விளங்குகிறார் பைரவர்.
காசியில் அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்த பின்னர், இக்கால பைரவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே பயணிகள் ஊர் திரும்புவது வழக்கம். இங்கே பூசாரிகள் " கால பைரவாஷ்டகம் " கூறி ரட்சையாகக் கறுப்புக் கயிரைக் கட்டி விடுவது வழக்கம்.
ஆந்திராவின் ராமகிரி ( சித்தூர் மாவட்டம் ), சீர்காழி - அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் ( இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு. ), உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு ( காவல் பைரவர் ), திருமீயச்சூர் - கொடியனூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ( இங்கு பைரவர் ஸ்தானத்தில் வீற்றிருப்பவர் எமன். இங்கு இவரருகில் எமதர்மனின் சகோதரன் சனீஸ்வரனும் பைரவரும் வீற்றிருக்கின்றனர். ) ஆகிய இடங்களில் கால பைரவர் வழிபாடு மிக பிரசித்தம்.
No comments:
Post a Comment