Friday, September 13, 2013

பைரவர் பரிகாரங்கள்

பணக் கஷ்டம் நீங்கிட :-



மண் அகலில் தாமரைத் திரி போட்டு ,நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லதுபெர்ளணமி அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவபூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும் . கோவிலில் இருக்கும்பைரவருக்கு , வீட்டில் பூஜையைத் துவக்குவதற்கு முன் ,சந்தனக் காப்புசெய்து ,சம்பங்கி மாலை அணிவித்து ,புனுகு பூசி , பால் பாயசம் ,நெல்லிக்கனி , ஆரஞ்சு ,வறுத்த கடலை , பருப்பு பொடி கலந்த அன்னம்இவைகளை நிவேதனம் செய்து ,வில்வ மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு ,பிறகு , விட்டில் ஏற்றி வைத்த தீபத்தின் முன் அமர்ந்து , கீழ்க்கண்ட ஸ்ரீசொர்ண பைரவர் காயத்திரியை 330 முறை படித்துவிட்டு , பைரவர் 108போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் .

மாங்கல்ய தோஷம் நீங்க :-


தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ , அதனால்தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள்செவ்வாய் கிழமை எமக்கண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து ,விரலி மஞ்சள் மாலை சூட்டி , மஞ்சள் கயறு                   ( தாலிக் கயறு ) சமர்ப்பித்து ,சர்க்கரைப் பொங்கல் , பால் பாயசம் , பானகம் , நிவேதனம் செய்து , சகசுமங்கலிப் பெண்களுக்கு , மஞ்சள் குங்குமம் , ஜாக்கெட் துணிவுடன் வசதிஇருந்தால் புடவையும் கொடுத்து , பைரவரை வழிபட வேண்டும் .

இழந்த பொருள் கிடைக்க :- 


மானம் , மரியாதை , கௌரவம் , இடம் , சொத்து போன்ற நீங்கள் இழந்தபொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட , பைரவர் முன் 27 மிளகைமூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு , வராகிக்கு முன் சிறிது வெண்கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும் .



பைரவரருள் !

No comments: