Thursday, September 19, 2013

பைரவர் வழிபாட்டின் பலன்கள் 


ஞாயிற்றுக்கிழமை:
இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் , வடை மாலைசாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் . கடன் வாங்கி வட்டியும் ,அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிறுகிழமை இராகு காலத்தில்ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி , புனுகு சாற்றி ,வெண்பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம்கிடைக்கும் . 

திங்கட்கிழமை : 
வில்வார்ச்சனை செய்திட சிவனருள்கிட்டும் .திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்விலகும் .

செவ்வாய்க்கிழமை:
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்இழந்த பொருளை திரும்பப் பெறலாம் .

புதன்கிழமை : 
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் .

வியாழக்கிழமை : 
விளக்கேற்றி வந்தால் ஏவல் , பில்லி , சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை:
மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும் .

சனிக்கிழமை: 
சனிபகவானுக்கு குரு பைரவர் . ஆகவே சனிக்கிழமையன்றுஇவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி , அர்த்தாஷ்டமச் சனிவிலகி நல்லவை நடக்கும் . காலபைரவர் உடலில் பூமியைத்தாங்கும் எட்டுநாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிப்பட்டால்சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

பைரவரருள்!

No comments: