Wednesday, August 10, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 2


பூதகங்களின் அதிபதியாக பூதநாதனாக இருக்கும் பைரவர் சிரமாலையும், கரகபாலமும், சூலமும், கையில் ஏந்திய காலபைரவர் ஞானநிலை காண எண்ணங் கொள்கிறார்.  பைரவரின் எண்ணம் ஈடேற பைஅரவம் சூடிய கயிலைநாதன் "கொன்றைவனம் (திருப்பத்தூர்) நீ தவம் புரிய ஏற்ற இடம்" என மகிழ்ந்து கூற பைரவரை எம்பெருமான் கந்தவேல் (முருகன்) அழைத்து வருகிறார்.  அவர் (பைரவர்) காசியில் இருந்து கொணர்ந்த வில்வம் காசி வில்வம என இங்கு உள்ளது.  தன கோரநிலையை விடுத்தது,  கௌரிக்காக தாண்டவமாடிய ஸ்ரீ நடராஜப் பெருமானின் வடபால் சர்வ சித்திபூமி எனும் இடத்தில மேற்கு முகமாக தனிக்கோயில் கொண்டுள்ளார் பைரவர். பாதம் இரண்டையும் பிணைத்து பெருவிரல்களால் பூமியை ஊன்றிய கோலத்தில், இருகாற்குதியையும் சகனத்தில் வைத்துள்ளார்.  ஜடாமகுடமும், நுதல் விழியில் அக்னியை ஒடுங்கி காதுகளில் சுருள்தோடும் உத்பலமும் உடையவரானார்.  வக்கிர தந்தங்களும், புன்னகையும் ஒளிர்கின்ற முகத்துடன் திகழ்கின்றார்.

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

நன்றி!    

No comments: