கலிகாலத்தில் நம்மைக் காப்பதற்காகட்டும், செல்வ வளங்களை வழங்குவதற்காகட்டும், இரண்டுக்கும் பைரவ வழிபாடு மிகச் சிறந்தது. பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குப் பகுதியிலே நிர்வாணமாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் மேல்நோக்கிய அக்னி ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைச்சந்திரன் அலங்கரிக்க, இருகோரைப்பற்கள் வெளியே தெரிய, இடுப்பில் நாகங்களை அணிந்து, கரங்களில் சூலம், பாகம், டமருகம் தாங்கி, பாதங்களில் தண்டை அணிந்து உக்ர ரூபத்துடன் காவல் தெய்வமாய் நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிப்பவர் காலபைரவர், காலச் சக்கரத்தின் அதிபதியும் இவரே.
ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இவர் காக்கும் தெய்வம் காலபைரவர்.
No comments:
Post a Comment