Sunday, August 28, 2011

பைரவாஷ்டமி பெருமை



அஷ்டமிப் பெருமை: சித்திரை மாத நவமி ராமருக்கும், ஆவனி மாத அஷ்டமி கிருஷ்ணருக்கும், மார்கழி மாத மூலம் ஆஞ்சநேயருக்கும், மாசி மாத அமாவாசை சிவனாருக்கும் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாத அஷ்டமி பைரவாஷ்டமி என்று மிகச் சிறப்பாக எல்லா சிவத்திருவாலயங்களிலும் அவரது திருவவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறக்க வாழலாம்.

மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு.

 மார்கழி - சங்கராஷ்டமி, 
தை - தேவதேவாஷ்டமி, 
மாசி  மகேஸ்வராஷ்டமி, 
பங்குனி - திரியம்பகாஷ்டமி, 
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி, 
வைகாசி - சதாசிவாஷ்டமி, 
ஆனி - பகவதாஷ்டமி, 
ஆடி - நீலகண்டாஷ்டமி, 
ஆவணி - ஸ்தானுஅஷ்டமி, 
புரட்டாசி - சம்புகாஷ்டமி, 
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி, 
கார்த்திகை - காலபைரவாஷ்டமி.

மேலும் காலபைரவாஷ்டமி எமவாதனை நீக்கும் மஹாதேவாஷ்டமி ஆகும். பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

நன்றி ! ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

No comments: