Sunday, August 7, 2011

ஸ்ரீ யோக பைரவர்



சிவ பெருமானின் ஐந்து குமாரர்களில் ஒருவராகிய ஸ்ரீ யோக பைரவர் வழிபாடு சிறப்பான இடம் வகிக்கிறது .  அறுவகை சமயத்துள்ளும் ஊடுருவி நிற்கும் பான்மை கொண்டது .  புறச்சமயமாம் பௌத்தம் முதலாய் அகச்சமயமாம் சைவம் ஈறாக அனைத்து சமயங்களின் உயிர் நாடியாக பைரவ வழிபாடு மிளிர்கிறது . 

எல்லா உலகுக்கும் அப்பாலோன், இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கும் நிலையினையே பைரவம் (பைரவர்) என சிவாகமங்களும், வேதங்களும், திருமுறைகளும், சாத்திரங்களும், புராணங்களும் புகழ்ந்தேத்துகின்றன.

அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் திருவுருவம் இருக்கும்.  பைரவமூர்த்தங்கள் அறுபத்திநான்கு வகையாக உள்ளன என ஆகமங்கள் கூறும்.  அவற்றுள் எட்டு சிறப்பாக பேசப்படுகின்றன.

பிரம்ம சிரசேதமூர்த்தியாக அவதாரம் எடுத்த பைரவர் காசியம்பதியில் காலபைரவராக காலச்சக்கரத்தை செவ்வனே சுழற்றிக் கொண்டுரிந்தார். 

சௌந்தர்யலஹரி என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகத்தில் நாற்பத்தி ஓராவது ஸ்லோகத்தில் காலாக்னிருத்ரனால் மகாப்ரளயத்தில் பஸ்பமாக்கப்பட்ட உலகத்தை மீட்டு, உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக அம்பிகை ஆனந்த பைரவியாகவும், பரமசிவன் ஆனந்த பைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால்  ஜகத் சிருஷ்டியே பைரவரால் தான் நடக்கிறது.

...............தொடர்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

நன்றி!   

No comments: