Tuesday, June 25, 2013

 பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்





கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.


      



இத்திரு தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது. இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது , ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .

இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம்/தியானம்  செய்துள்ளார். ஆதி சங்கரர் தவத்தினால்(தியானத்தினால்) ஏற்பட்ட தலை பாரத்தையும்,உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது. 

நன்றி ஆன்மீகக்கடல் !! 
  

Tuesday, June 18, 2013

செவ்வாய்க்கிழமை பைரவர் விரதம்




தினமும் மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. 

குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. 


அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். 


சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பது தான்.

நன்றி மாலைமலர்