Thursday, February 24, 2011

தேய்பிறை அஷ்டமி - பைரவர் வழிபாடு



21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை தேய்பிறை அஷ்டமி
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்யவும் 



தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும்  பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.  


ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில்
காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து
நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.


நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று  மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர்  என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை .

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.




அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியல்:



 26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

Wednesday, February 23, 2011

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்


தேவராஜ ஸேவ்யமான பாவனாம்க்ரி பங்கஜம்

வ்யால யக்ஞஸூத்ரமின் துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

பானு கோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்

நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .

கால காலமம்புஜாக்ஷ மக்ஷஷூலமக்ஷரம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

ஷூல டம்க பாஷ தண்டபாணி மாதிகாரணம்

ஷ்யாம காயமாதி தேவமக்ஷரம் நிராமயம் .

பீம விக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்த சாருவிக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்த லோக விக்ரஹம் .

வினிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீ லஸத்கடிம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

த4ர்மஸேதுபாலகம் த்வதர்ம மார்கனாஷனம்

கர்மபாஷ மோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .

ஸ்வர்ணவர்ண ஷேஸ பாஷ ஷோபிதாம் கமண்டலம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே 

ரத்னபாதுகா ப்ரபாபி ராமபாத யுக்மகம்

நித்யம த்விதீயமிஷ்ட தைவதம் நிரம்ஜனம் .

ம்ருத்யு தர்ப நாஷனம் கரால தம்ஷ்ட்ர மோக்ஷணம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

அட்டஹாஸ பின்ன பத்மஜாண்டகோஷ ஸம்ததிம்

த்ருஷ்டி பாத்தனஷ்ட பாபஜால முக்ரஷாஸனம் .

அஷ்டஸித்தி தாயகம் கபாலமாலிகாதரம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்

காஷிவாஸ லோகபுண்ய பாபஷோதகம் விபும் .

நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

.. பல ஷ்ருதி ..

காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்

க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .

ஷோகமோஹ தைன்யலோப கோபதாப னாஷனம்

விப்ரயான்தி காலபைரவாம் க்ரிஸன்னிதிம் நராத்ருவம்

.. இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்

ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் .

Sunday, February 20, 2011

மதுரை - பைரவர் கோவில்கள்

இன்று நான் படித்த மதுரை மன்னர் காலேஜ் இல் PHYSIC DEPARTMENT ALUMNI ASSOCIATION MEETING நடந்தது. 1990-93 இல் என்னுடன் படித்த சில நண்பர்களை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . Function முடிந்தவுடன் நானும் என் நண்பர் திரு. பெரியசாமி யும்



மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்றோம் . இந்த பைரவர் கோவில் தான் என்னை பைரவர் வழிபாடுக்கு தூண்டிய கோவில் . இக் கோவிலில் பைரவர் தரிசனம் செய்தது எனக்கு ஆத்ம திருப்தியை தந்தது .







மற்றும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள பைரவர் கோவிலுக்கும் சென்றோம் . இந்த கோவிலில் கட்டு மானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது . இந்த கோவில்களை பற்றி பின்னர் பார்க்கலாம்
.


Wednesday, February 16, 2011

ஸ்ரீ பைரவர் 108 போற்றி


ஸ்ரீ பைரவர் 108 போற்றி






தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக்காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
ஓம் உக்ர பைரவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எல்லை தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வ பங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறனே போற்றி
ஓம் கட்வாங்க தாரியே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர் தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்ட பைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினை அறுப்பவனே
போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ÷க்ஷத்ரபாலனே போற்றி
ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீது அழிப்பவனே போற்றி
ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரச ரூபனே போற்றி
ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையளிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதங்களின் நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மகா பைரவனே போற்றி
ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
ஓம் மகா குண்டலனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

Sunday, February 13, 2011

mUs;kpF flk;gtNd];tuh; jpUf;Nfhtpy; - iguth; (Fspj;jiy)



,d;W ehd; Fspj;jiyf;F xU jpUkzj;jpw;fhf nrd;wpUe;Njd;. jpUkzk; mUs;kpF flk;gtNd];tuh; jpUf;Nfhtpypy; eilngw;wJ. NfhtpYf;Fs; EioAk; NghNj Nfhtpypy; cs;s rpy tpj;jpahrq;fisg; ghh;j;Njd;. ,q;Fs;s rptd; Rak;Gypq;fkhf tlf;F Nehf;fp ,Ue;jhh;. ,J xU rpwg;G mk;rkhFk;. kw;Wk; rptDf;F gpd; Gwj;jpy; rg;jfd;dpah;fs; ,Uf;fpwhh;fs;. mk;kd; mUs;kpF Kw;wpyh Kiyak;ik fpof;F Nehf;fp jhprdk; jUfpwhh;. rz;bNf];tuh; Nkw;F Kfkhf ,Uf;fpwhh;. rdP];tuUf;F jdp rd;djp cs;sJ. ,q;Fs;s iguth; mk;kd; rd;djpf;F vjphpy; njw;F Nehf;fp ,Uf;fpwhh;. ,e;j Nfhtpy; Fspj;jiyapy; fUh; jpUr;rp neLQ;rhiyapd; NkNyNa mike;Js;sJ. Njthug;ghlypy; ,lk; ngw;Ws;s Nfhtpy; ,JthFk;. Rkhh; 1000-2000 tUlq;fSf;F Kw;gl;lJ.

Thursday, February 10, 2011


godp mbthu iguth;




godp kiy mbthuj;jpy; Winch ];Nlrd; vjphpy; n[dNul;lh; &k; mUfpy; xU goikahd iguth; Nfhtpy; cs;sJ. godp nry;gth;fs; mtrpak; ,e;j igutiu jhprpf;f Ntz;Lk;. Nfhtpy; rpwpjhf ,Ue;jhYk; mjpy; cs;s mikg;Gfs; kw;w Nfhtpy;fis tpl rpwg;ghdjhf ,Uf;Fk;. gyp gPlq;fs; ,uz;L> eha; thfdk; %d;W> kw;Wk; ehd;F fuq;fSld; $ba iguth; ,q;F cs;shh;. ,g;gb nrhy;ypf; nfhz;Nl Nghfyhk;. MfNt midtUk; godp nry;Yk; nghOJ kwthky; ,e;j igutiuAk; jhprpf;f Ntz;Lk; vd;gJ vdJ tpUg;gk;.

Monday, February 7, 2011

இரண்டு பைரவர்கள்


  • அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

  • முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.

  • பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

  • இங்கு பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Saturday, February 5, 2011

,d;W Qhapw;Wf;fpoik




Qhapw;Wf;foik md;W uhFfhyj;jpy; igutUf;F tpg+jp mgpN~fk; my;yJ Uj;uhgpN~fk; nra;J tilkhiy rhw;wp topgl Ntz;Lk;. NkYk; md;W xd;gJ Kiw mh;r;rpj;J> japh; md;dk;> Njq;fha;> Njd; rkh;g;gpj;J topgl;lhy; tpahghuk; nropj;J tsUk;> nry;tk; ngUFk; tof;fpy; ntw;wp fpl;Lk;.

திருக்காரவாசலில் காட்சி தரும் மூன்று பைரவர்கள்


அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், இந்த திருத்தலத்துக்கு வந்தாலே உங்களுக்கு நல்லகாலம் ஆரம்பம் தான் என்பதைச் சொல்லுவது போல காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம்.


காலையில் வணங்க வேண்டிய கா(லை) பைரவர், மதியம் வணங்க வேண்டிய உச்சிக்கால பைரவர், அர்த்த ஜாமத்தில் வணங்க வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி விசேஷமானது. அதுவும் மூன்று பைரவர்களுக்கு நேர் எதிரில் மகாலக்ஷ்மி பார்த்துக் கொண்டே இருப்பதால் இவர்களை வணங்கினால் செல்வம் உங்களை சேரும்.

திருவாரூரிலிருந்து (14 கி.மீ.) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் திருக்காரவாசல் உள்ளது.

Friday, February 4, 2011

வேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்




குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர்


'காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லை என்றால்குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின்சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர்என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின்காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசிமாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்துவருபவர்- அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும்பக்தர்கள் திரும்பும்போது, அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்திபெறும் என்று புராணம் சொல்கிறது.
பொருளாதார ரீதியாக காசிக்குச் செல்வது என்பது எல்லோருக்கும் இயலாதஒன்று. எனவேதான், வசதி உள்ள அன்பர் கள் பைரவரை தரிசிக்க விருப்பம்கொண்டால் காசிக்குப் போகலாம்... வசதி இல்லாத அன்பர்கள், நம்தமிழகத்திலேயே உள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்துபலன் பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.
பைரவர் என்பவர், சிவனின் அம்சம். «க்ஷத்திரங்களை இவர் காப்பதால், «க்ஷத்திரபாலகர் என்றும் அழைக்கப் படுகிறார். நான்கு வேதங்களே நாய்வடிவில் பைரவருக்குக் காவலாக இருக் கின்றன. 64 வேறுபட்டவடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள்.




பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும். பொன்னும்பொருளும்
மன அமைதியும் மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால், கிடைக்கக் கூடிய சிலசெல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவ ரான கொங்கணர், பைரவரைவழிபட்டு அட்டமாஸித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல்,எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத்தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்துவிளங்கியதற்கு ஸ்ரீபைரவரின் அருளே பிரதான காரணம்!

பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு. அப்போதுபிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்கவேண்டும்). திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாகவிளங்கியதா லும், ஐந்து தலைகளுடன் அவதரித்ததாலும் லோகரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு,தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும்என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர்தேவர்கள். சினம் கொண்டார் சிவபெருமான். பிரம்மனின் செருக்கை அடக்கத்தீர்மானித்தார். தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின்தலைகளில் ஒன்றை கிள்ளி வரும்படி ஆணை இட்டார். வீராவேசத்துடன்புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒருதலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார். இந்த பைரவர் அம்சமேவடுகதேவர் ('வடுகன்' என்றால் பிரம்மச்சாரி). புராணத்தில் சொல்லப்பட்டதகவல் இது.





குண்டடத்துக்கு வருவோம். இங்குள்ள பைரவரின் திருநாமம்- ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி. இங்கு உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம் இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம்- விசாலாட்சி. என்றாலும் பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது. கலியுகத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, பக்தர்களைத் தன்பால் ஈர்த்து வருகிறார் இந்த காலபைரவ வடுக நாதர்.
கோவை- மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது. கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ.! பல்லடம்- தாராபுரம் மார்க்கத்தில் இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறது குண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ.! தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு.




மகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாக புராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின் மேல் மோகம் கொண்ட தால், அவனைக் கொன்றான் பீமன். இது நிகழ்ந்த இடம்- குண்டடம். 'கொன்ற இடம்' என்பது பின்னாளில் குண்டடம் ஆகி விட்டது.
''பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது (மறைந்து வாழ்வது) குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி மரத்தின் பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்தான் அர்ஜுனன் (இதே நிகழ்வை வேறு சில ஊர்களோடும் தொடர்புபடுத்திச் சொல்வது உண்டு). இதனால் இந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் 'வில் காத்த விநாயகர்' என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1950-ஆம் வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடி இல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின் எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்று சொல்கிறது.
தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்று பெயர். அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில் ஒரு வருடம் பேடி யாக இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம் முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத் தில் அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம் சூரியநல்லூர் எனப்படுகிறது. இது, தாராபுரத்துக்கும் குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.