Thursday, March 27, 2014

பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள்



1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
4. ஓம் பக்தப்ரிய நமஹ
5. ஓம் பக்த வச்ய நமஹ
6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
7. ஓம் ஸித்தித நமஹ
8. ஓம் கருணாமூர்த்தி நமஹ
9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
12. ஓம் ரசஸித்தித நமஹ

சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் 12 ஐ மிக முக்கியமானதாக கொள்கிறார்கள். அவற்றை மேலே காணலாம்.

அந்த 12 திருப்பெயர்கள்:

ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸ்வர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்ட ப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ண ஸித்தித, ரசஸித்தித

இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார்.

எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து செபித்தால் மந்திர செபமாகவும், அப்படியே பெயர்களை மட்டும் சொல்லுதல் நாம செபமாகவும் கொள்ளப்படும்.

மந்திர செபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நாம செபத்திற்கு கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இதே 12 பெயர்களை 9 முறை சொன்னால் 108 தடவைகள் என்றாகும். இந்த திருப்பெயர்களை சொல்லுதல் மூலம் சொர்ண பைரவரின் அருள் மிக எளிதில் கிடைக்கும்.

நன்றி !   ஆன்மீகசுடர் 

Monday, March 10, 2014

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.


ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்

நன்றி !  ஆன்மீகச்சுடர்