Thursday, September 4, 2014

பெருவாழ்வு கிட்டும் பைரவர் வழிபாடு

பைரவப் பெருமானை காலையில் வணங்கினால் சர்வ நோய்கள் நீங்கும். நண்பகலில் வணங்கினால் சித்திகள் கிட்டும். மாலையில் வழிபட்டால் சகல பாவங்களும் விலகும்.
அர்த்த சாமத்தில் வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் தயிர் சாதம் தேன் செவ்வாழை வெல்லப் பாயாசம் அவல் பாயாசம் உளுந்து வடை சம்பா அரிசி சாதம் பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது உத்தமம்.
பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. பால் தேன் பன்னீர் பழரசம் அபிஷேகமும் மிக விஷேடம்.
இதில் வாசனை திரவியங்களான புனுகு அரகஜா ஜவ்வாது கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.