Wednesday, February 26, 2014

சொர்ண பைரவர் போற்றி - 33


ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி  
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி 
ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி  
ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி 
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி 
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி 
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி 
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி 
ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி 
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி 
ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி 
ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி 
ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி. 

- அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு மேற்கண்ட போற்றி பாடலை தினமும் பாராயணம் செய்து வர கர்ம வினைகள் நீங்கி 16 பேறுகளையும் பெறுவர் என்பது திண்ணம்.

நன்றி! மாலைமலர் 

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை)

தேவையானவை: ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு எனப்படும் மண் விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்)
*அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தும் மனவலிமை

தினமும் காலையில் குளித்துமுடித்துவிட்டு,அகல்விளக்கில் நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது.

தீபம் ஏற்றியப்பின்னர்,வீட்டில் சமைத்த உணவில் முதல் கரண்டியை எடுத்து,ஒரு கிண்ணத்தில் இவரது படத்தின்முன்பாக வைக்கவேண்டும்.சோறு எனில் ஒரு கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அந்த உணவின்மீது தாளித்த தயிர் அல்லது வெல்லம் தூவ வேண்டும்.பிறகு,சந்தனத்தை நீரில் கரைத்து,சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும்.

பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும்.அப்படி ஆராதித்தப்பின்னர்,கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில் 330 முறை ஜபிக்க வேண்டும்.

மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

இத்துடன்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாடு நிறைவடைந்தது.இரவு 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் காலையில் நிவேதனமாக வைத்தோமே? அந்த காலை உணவை எடுத்து,நமதுவீட்டின் வெளிப்புறம்,சற்று உயரமான இடத்தில்(கல்லில்!) ஒரு வாழை இலையில் அல்லது கிண்ணத்தில் அந்த உணவை வைக்க வேண்டும்.இப்படி தினமும் செய்துவரவேண்டும்.
இந்த தினசரி வழிபாட்டினால்,ஓரிரு நாள் அல்லது ஓரிரு வாரங்களில் நாம் இரவு வீட்டுக்கு வெளியே உணவை வைக்கும் போது,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ,பைரவர் வடிவத்தில் சாப்பிட வருவார்.
(இந்த நிவேதனத்தை நமதுவீட்டு வளர்ப்பு பைரவருக்குப் படைக்கக் கூடாது)
இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை 180 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவருவதால்,நமது கர்மவினைகள் தீரும்;அப்படி தீரும்போதே நமது பண வருமானம் நான்கு மடங்காக அதிகரிக்கும்;வேலை பார்ப்பவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கும்;விரும்பும் இடமாற்றம் கிடைக்கும்;தொழில்பார்ப்பவர்களுக்கு விற்பனை இரு மடங்காகும்;அரசியலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவார்கள்;உயிரைத்தவிர,அனைத்தையும் இழந்தவர்களுக்கு இழந்த அனைத்தும் கிடைக்கும்.

இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு.அது இந்த வழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.180 நாட்களுக்கு!!!இந்த வழிபாட்டை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் செய்துவந்தால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,சொர்ணம் நம்மிடம் குவியத்துவங்கும்;(சொர்ணம் = தங்கம்)

இந்த வழிபாடு செய்பவர்களின் வீட்டில் இருப்போர்கள்,அசைவம் சாப்பிடலாம்;அசைவத்தை அவர்களும் கைவிட்டால்,அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்ட பலன்கள் வந்து சேரும்.ஆமாம்!

ஒரு குடும்பத்தில் ஒருவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால்,அந்த குடும்பத்தினர் அசைவத்தை வீட்டிலும்,வெளியேயும்,விழாக்களிலும் சாப்பிடாமல் இருந்தாலே அவர்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும்;பண வரவு அதிகரிக்கும்.

சிவனுடைய முதல் அவதாரம் பைரவர்! வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் மட்டுமே!!!
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் வீடு என்று ஒரே ஒரு அறைதான் உண்டு.அந்த அறையில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம்.அதே அறையில் குடும்ப தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்.தப்பில்லை;வழிபாடு செய்யும்போது உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.

Thursday, February 20, 2014

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?


வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. 

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். 

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். 

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். 

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். 

வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். 

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: 

வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். 

இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். 

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. 

சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். 

எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். 

நன்றி! மாலை மலர் 

Tuesday, February 18, 2014

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். 

துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். 

சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் 
வைகாசி தாதா - ருரு பைரவர் 
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் 
ஆடி அரியமான் -கபால பைரவர் 
ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர் 
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர் 
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர் 
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர் 
தை விஷ்ணு - குரோதன பைரவர் 
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர் 
பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.

நன்றி! மாலைமலர் 

துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம்

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். 

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிகிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

கோவில் நடை திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது. இதை செய்ய முடியாதவர்கள் தினமும் விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். 

அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம். பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி, அணைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர், மேலும் சனி பகவானுடைய குரு.

நன்றி ! மாலைமலர் 

Monday, February 17, 2014

பைரவர் விரத வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் சிம்ம ராசிக்காரர்கள் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பு. தள்ளிப்போகும் திருமணங்களுக்கு பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் விரதமிருந்து (மாலை 4.30 மணி முதல்-6.00 மணி வரை) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும்.

இந்த விரதத்தை தொடர்ந்து  9 வாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

நன்றி !  மாலைமலர் 

Wednesday, February 12, 2014

கஷ்டங்கள் போக்கும் பைரவர் எளிய பரிகாரங்கள்


கல்வியில் வெற்றிபெற: 

புதன்கிழமைகளில், புதன் ஹோரையில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசி பருப்பு பொடி கலந்த அன்னத்துடன் பருப்பு பாயசம் நிவேதனம் செய்து, பைரவரை அர்ச்சித்து வழிபட வேண்டும். 

வியாபார வெற்றிக்கு: 

புதன்கிழமைகளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, பாசிப் பயறு சுண்டல், பாசிப் பயறு பாயாசம், பாசிப்பயறு பொடி கலந்த அன்னம், கொய்யாப் பழம் இவைகளை நிவேதனமாக வைத்து, அர்ச்சித்து பைரவரை வழிபட வேண்டும். 

பணக் கஷ்டம் நீங்கிட: 

மண் அகலில் தாமரைத் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லது பவுர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ பூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும். 

மாங்கல்ய தோஷம் நீங்க: 

தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ, அதனால் தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சல் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு (தாலிக் கயிறு) சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சக சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம், ஜாக்கெட் துணியுடன் வசதி இருந்தால் புடவையும் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும். 

இழந்த பொருள் கிடைக்க: 

மானம், மரியாதை, கவுரவம், இடம், சொத்து போன்ற நீங்கள் இழந்த பொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட, பைரவர் முன் 27 மிளகை மூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு, வராகிக்கு முன் சிறிது வெண் கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும்.

நன்றி! மாலை மலர் 

Tuesday, February 11, 2014

பைரவர் யாருடைய அம்சம்?

பைரவர், வீரபத்திரர், ÷க்ஷத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் ÷க்ஷத்ர பாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். 

நன்றி !  தினமலர்