Monday, January 31, 2011

ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்


ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================


கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்



கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥



ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி



ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்



கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி




ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (3)


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடுயாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (5)


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான் நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் (6)

சதுர்முகன் ஆணவத் தலையினை க் கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)


ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய் ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)

Sunday, January 30, 2011

அஷ்ட பைரவ தரிசனம்!


http://new.vikatan.com/sakthi/2011/01/25/images/p160.jpgபைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம்- பைரவம். தவிர, காபாலிகர்களும் பாசுபதர்களும்கூட ஸ்ரீபைரவரைச் சிறப்பாக வழிபடுகின்றனர். ஸ்ரீபைரவரை சூரிய சமயத்தவர் (சௌமாரம்) மார்த் தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர்.

சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்ட மாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில்... அனுமன் காட்டில்- ருரு பைரவரும்; துர்காமந்திரில்- ஸ்ரீசண்ட பைரவரும்; விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம்- ஸ்ரீஅஜிதாங்க பைரவரும்; லட் பைரவர் கோயிலில்- ஸ்ரீகபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில்- ஸ்ரீவடுக பைரவர் எனும் பெயரில் ஸ்ரீகுரோதன பைரவரும், தேவரா கிராமத்தில்- ஸ்ரீஉன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) ஸ்ரீசம்ஹார பைரவரும்; காசிபுரா எனும் இடத்தில்- ஸ்ரீபீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர்!

சீர்காழி, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தின் (தெற்கு) வெளிப் பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நகரத்தார் சீமையிலுள்ள... திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன் பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

Saturday, January 29, 2011




பைரவர்

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் அந்தக் கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீபைரவர் தான்!

ஆமாம்! யார் இந்த பைரவர்?. இவர் ஏன் காவல் தெய்வமாக வழிபடப்படுகின்றார்?. சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ ஏன் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இவர் தம் வழிபாடு எப்பொழுது நம் நாட்டில் காலூன்றியது என்பது பற்றி இனிப் பார்க்கலாம்.

அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். (வாதாபியிலிருந்து கணபதி வந்தது போல). அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவவழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்துஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்துகால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது.

பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு காலூன்றியிருக்க வேண்டும். அதுவும் காபாலிகர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தேறிய பின்னரே தொடங்கியிருக்க வேண்டும். (பெரும்பாலும் காபாலிகர்கள், நிர்வாணமாகத் திரிந்தவர்கள், கையில் சூலத்தை ஏந்தியவர்கள். பைரவரும் திகம்பரர். கையில் சூலாயுத்ததினை உடையவர்). முதலில் இரகசிய வழிபாடாக, குகை போன்றவற்றில் வழிபடப்பட்டுப் பின்னர் கோவில்களில் வழிபாடுதொடங்கியிருக்க வேண்டும். வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டுக் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஆனால் பைரவருக்கென்று தனிக் கோயில்கள் எதுவும் தமிழ்நாட்டில் உள்ளதாஎன்பது தெரியவில்லை.

பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்து உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் கூட ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

இவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர்திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம்காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். (இத்தலத்தின் சிறப்புகள் பற்றித் தனியாகப் பின்னர் எழுதுகிறேன்). இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச்சன்னதியில் இந்த பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் 'ஆதி பைரவர்' என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிசேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். பொதுவாகப் பலரும் இங்கு தனியாகச் சென்று வழிபடவே அஞ்சும் அளவிற்கு மிக உக்ரமானவராக ஒரு காலத்தில் விளங்கினாராம். (காஞ்சி காமாட்சி போல) இப்பொழுதும் பலர், வழிபாடு முடிந்து பைரவர் சன்னதி மூடப்பட்டால், ஆலயத்தைச் சுற்றி வரும் பொழுது, அங்கு மட்டும் தனியாகச் சென்று வழிபட அஞ்சுவர். அந்த அளவிற்கு உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

மொத்தம் இந்தப் பகுதியில் பைரவ வழிபாட்டின் சிறப்பைக் குறிக்குமாறு அஷ்டபைரவர்கள் காட்சி தருகின்றனர்.

அவையாவன

1. யோக பைரவர் திருத்தளி நாதர் ஆலயம் திருப்பத்தூர்

2. மெய்ஞானபைரவர் மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம் தி.வயிரவன்பட்டி

3. கால பைரவர் ஆண்டப்பிள்ளை நாயனார் ஆலயம் கண்டரமாணிக்கம்

4. வைரவர் ஸ்ரீவளரொளிநாதர் ஆலயம் வைரவன்பட்டி.

5. பைரவர் ஸ்ரீதிருமேனிநாதர் ஆலயம் ஒழுகமங்கலம்

6. இரட்டை பைரவர் அழகுமுனீசுவர பைரவர் அழகாபுரி

7. கால பைரவர் துருவாசபுரம்

8. வடுக பைரவர் கொடுங்குன்ற நாதர் ஆலயம் பிரான்மலை


மற்றும் கோட்டை பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், சேத்ரபாலகர், ஸ்ரீ பிஷாடணர், பூதநாதர், கபால பைரவர், ஆபதுத்தாரணர் எனப் பல பைரவ அம்சங்கள் உள்ளன அவற்றைப் பற்றியும், சிறப்புகள், வழிபாட்டு முறைகள் பற்றியும் இனி விரிவாகப் பார்க்கலாம்.

கால பைரவர்:

மற்றொரு வரலாறும் பைரவர் பற்றிக் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் 'சம்பா சஷ்டி' என்பது பைரவருக்கான விழாவாக ஒரு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

அந்த ஆலயம்...

(தொடரும்...)
நலன்கள் அருளும் நான்கு பைரவர்கள்!

ஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிசலூர். இங்குள்ள சௌந்தர நாயகி உடனுறை சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் வெகு பிரசித்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலம், பைரவர் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கிறது.

முற்காலத்தில் ரிஷிகள் (யோகிகள்) எட்டுப் பேர் இங்கு வந்து, கடும் தவம் புரிந்தனராம். அதன் பலனாக, இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற ரிஷிகள் இறுதியில் லிங்கத் திருமேனியிலேயே ஐக்கியமானார்களாம். எனவே, இங்குள்ள இறை வனுக்கு, 'சிவயோகி நாதர்' என்று திருநாமம்.


தவிர, புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், யோக நந்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இன்றும், லிங்கத் திருமேனி(பாணம்)யில் ரிஷிகளின் சடைகள் காணப்படுகின்றனவாம்! அம்பாளின் பெயர்- சௌந்தர நாயகி.

ஒரு முறை, தன் மனைவியுடன் இங்கு வந்த ராஜராஜ சோழன், பிள்ளை வரம் வேண்டி தங்கத் தால் ஆன பசுவை தானம் அளித்து வழிபட்டதாகவும், சிவனருளால் அவருக்கு ராஜேந்திர சோழன் பிறந்ததாகவும் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் மதில் சுவரில் உள்ள சூரிய கடிகாரம், சோழர்களது கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டு!

இங்குள்ள இறைவனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள நந்தி தேவர் தனி சிறப்பம்சத்துடன் திகழ்கிறார். முற்காலத்தில், கொடிய பாவங்கள் செய்து வாழ்ந்து வந்த ஒருவன், இறக்கும் தறுவாயில் மனம் திருந்தி இங்கு வந்து, 'சிவயோகிநாதா... என்னைக் காப்பாற்று!' என்று அபயக் குரல் எழுப்பினானாம். அதைச் செவியுற்ற இறைவன், 'அபயக் குரல் எழுப்பியது யார்?' என்று பார்க்கும்படி நந்தியை பணித்தார். அதன்படி தலையைத் திருப்பிப் பார்த்த நந்திதேவர், குரல் எழுப்பியது யாரென்று இறையனாருக்குச் சொல்ல... இறைவன், அந்த பாவிக்கு காட்சியளித்து அருள் புரிந்தார் என்கிறது தல புராணம். எனவே, இங்குள்ள நந்தியம்பெருமானின் முகம் இறைவனை நோக்காமல், வேறொரு திசையை நோக்கித் திரும்பிய வண்ணம் காட்சி தருகிறது. நந்தியின் மூலமாக இறைவன் அருள் புரிந்ததால் இந்தத் தலம், ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தைச் சேர்ந்த பக்தர்களது குறை தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது.

இந்தக் கோயிலில் ஒரே வரிசையில் காட்சி தரும் நான்கு பைரவர்களை 'சதுர்கால பைரவர்கள்' என்பர். முற்காலத்தில், மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகக் கருதப்பட்டது. இதை நான்காகப் பிரித்து, சதுர்கால பைரவர்கள் நால்வரையும் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் உரியவர்களாகக் கருதி வழிபடுவர்.

ஞான பைரவர்: முதல் 30 ஆண்டுகள், ஞானம் பெறு வதே மனிதனின் குறிக்கோள். அந்த ஞானத்தை அருள்பவர் ஞான பைரவர். இவரை வழிபட்டால் கல்வி, வேலை மற்றும் இனிய வாழ்க்கை அமையும்.

சுவர்ணாகர்ஷன பைரவர்: வாழ்வின் 2-வது கட்டத்துக்கு (31 முதல் 60 வயது வரை) உரியவர் இவர். மகாலட்சுமியின் சந்நிதிக்கு எதிரில் திருவாசி யுடன் காட்சி தரும் இந்த பைரவர், தம்மை வழிபடுவோருக்கு செல்வகடாட்சம், வியாபார அபிவிருத்தி, குடும்பத்தில் நன்மை ஆகிய பலன்களையும் அருள்கிறார்.

உன்மத்த பைரவர்: இவர், வாழ்வின் 3-வது கட்டத்துக்கு (61 முதல் 90 வயது வரை) உரியவர். இவரை வழிபட்டால் நோய்கள், சத்ரு பயம், திருஷ்டி பயம், கடன் தொல்லை ஆகியவற்றுடன் சனி தோஷங்களும் நீங்கும்.

ஒரு முறை, சூரியனின் மகனான சனீஸ்வரன் பெரும் அவமதிப்புக்கு ஆளானார். பிறகு, தன் தாய் சாயாதேவி யின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு, நவக்கிரக பதவியைப் பெற்றாராம். ஆகவே, பைரவரை சனீஸ்வரரது குருவாகக் கருதுவர். சனீஸ் வரர் இங்கு, வெண்ணிற ஆடையுடன் பால சனீஸ்வர ராக பைரவர்களின் அருகிலேயே காட்சி தருகிறார்.

யோக பைரவர்: மனித வாழ்வின் கடைசி 30 ஆண்டு களுக்கு உரிய இவர், சகல யோகங்களையும் தருபவர். இவருக்கு அருகில் உத்திர கயிலாய லிங்கம் உள்ளது. எனவே இவரை வணங்கினால், கயிலாயப் பதவி கிட்டும் என்பது நம்பிக்கை.

வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பைரவருக்கு உகந்தவை. தவிர இங்கு, ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத் தில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து,

அதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

- என்ற கால பைரவர் துதி சொல்லி, சதுர் கால பைரவர்களை வழிபட, சகல நலன்களை யும் பெறலாம்.

சமீபத்தில் இந்தக் கோயிலில், 64 பைரவர்களுக் கும் தனித்தனியே குண்டங்கள் அமைத்து, 'சதுர் சஷ்டி பைரவ மகா யாகம்' நடைபெற்றது. உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த யாகத்துக்கு முந்தைய தினமும், யாகம் முடிந்த பிறகும் பெரு மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது!

Friday, January 28, 2011



அஷ்ட பைரவர் ஸ்தலங்கள்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் – இலுப்பைக்குடி

+91- 4561 - 221 810, 94420 43493.

  • குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

  • திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்

  • அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

  • காரைக்குடியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பஸ் உண்டு.

Thursday, January 27, 2011


முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

இவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர்திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம்காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். (இத்தலத்தின் சிறப்புகள் பற்றித் தனியாகப் பின்னர் எழுதுகிறேன்). இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச்சன்னதியில் இந்த பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் 'ஆதி பைரவர்' என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிசேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். பொதுவாகப் பலரும் இங்கு தனியாகச் சென்று வழிபடவே அஞ்சும் அளவிற்கு மிக உக்ரமானவராக ஒரு காலத்தில் விளங்கினாராம். (காஞ்சி காமாட்சி போல) இப்பொழுதும் பலர், வழிபாடு முடிந்து பைரவர் சன்னதி மூடப்பட்டால், ஆலயத்தைச் சுற்றி வரும் பொழுது, அங்கு மட்டும் தனியாகச் சென்று வழிபட அஞ்சுவர். அந்த அளவிற்கு உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

Tuesday, January 25, 2011


அஷ்ட பைரவர் ஸ்தலங்கள்

தி.வயிரவன்பட்டி: மெய்ஞானபைரவர்

திருக்கோஷ்டியூரை அடுத்து இந்த ஊர் காணப்படுவதால், தி.வயிரவன்பட்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. தல இறைவன் மெய்ஞான சுவாமி என அழைக்கப்படுகின்றார். லிங்கத் திருமேனியாக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி பாகம் பிரியாள் என்னும் பெயரில் காட்சி அளிக்கின்றாள். பைரவர் தெற்கு நோக்கிய திசையில் காணப்படுகின்றார். உக்ர மூர்த்தி. காபாலிகர்களால் வழி பட்டதாகத் தெரியவருகின்றது. வழிபோடுவோருக்குச் சகல பேறுகளையும் அளிப்பவர் என்ற பெருமை
இவருக்கு உண்டு. பல்வேறு கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான ஆலயம். (நான் கடந்த வருடம் சென்றி ருந்த பொழுது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. குடமுழுக்கு ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது).

கண்டரமாணிக்கம் ஆண்டப்பிள்ளை கால பைரவர்:
கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சமீப வள்ளி.
இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாசாணசிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.
பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.
இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால் ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.
வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும் கூறப்படுகின்றது.