Friday, September 20, 2013

அஷ்டமி வழிபாட்டுப் பலன்கள் 



ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால்வழிப்பட்டால் நல்லமக்கள் செல்வங்களைப் பெறலாம் . அஷ்டமி திதியில்மற்றும் பிரதி தமிழ்மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் , சுவாதிமிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிப்பட்டால்உத்தியோகத்தில் மதிப்பும் , பதவி உயர்வும் கிட்டும் . தொழிலில் லாபம்கிட்டும் .

சனி பிரதோஷத் தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிப்பட்டால்வழக்குகளில் வெற்றிகிட்டும் .


தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிப்பட்டால் காலத்தினால்தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் . நல்லருள்கிட்டும் . பஞ்ச தீபம்என்பது இலுப்பைஎண்ணெய் , விளக்கெண்ணெய் , தேங்காய்எண்ணெய் ,நல்லெண்ணெய் , பசுநெய் ஆகும் . இவற்றை தனித்தனி தீபமாக ஏற்றவேண்டும் . அகல் விளக்கில் ஏற்றலாம் . ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம்ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் .



தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொருசெவ்வாய்தோறும் பைரவரைவணங்கி "கால பைரவ அஷ்டகம்படித்துவந்தால் எதிரிகளை அழித்து , கடன்கள்தீர்த்து , யமபயம் , மட்டுமில்லாதுஎவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம் . 

பைரவரருள்!

Thursday, September 19, 2013

பைரவர் வழிபாட்டின் பலன்கள் 


ஞாயிற்றுக்கிழமை:
இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் , வடை மாலைசாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் . கடன் வாங்கி வட்டியும் ,அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிறுகிழமை இராகு காலத்தில்ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி , புனுகு சாற்றி ,வெண்பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம்கிடைக்கும் . 

திங்கட்கிழமை : 
வில்வார்ச்சனை செய்திட சிவனருள்கிட்டும் .திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்விலகும் .

செவ்வாய்க்கிழமை:
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்இழந்த பொருளை திரும்பப் பெறலாம் .

புதன்கிழமை : 
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் .

வியாழக்கிழமை : 
விளக்கேற்றி வந்தால் ஏவல் , பில்லி , சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை:
மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும் .

சனிக்கிழமை: 
சனிபகவானுக்கு குரு பைரவர் . ஆகவே சனிக்கிழமையன்றுஇவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி , அர்த்தாஷ்டமச் சனிவிலகி நல்லவை நடக்கும் . காலபைரவர் உடலில் பூமியைத்தாங்கும் எட்டுநாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிப்பட்டால்சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

பைரவரருள்!

Tuesday, September 17, 2013

தடைகளை உடைத்து வெற்றிபெற ஆகாய சித்த பைரவர்  மந்திரம் 



ஓம் நமோ பகவதே விஜய பைரவாய
ப்ரளயாந்தகாய – மஹாபைரவாய
ஸர்வ விக்ன நிவாரணாய - சக்தி தராய
சக்ரபாணயே – வடமூலநிஷண்ணாய
அகிலகணநாயகாய – ஆபதுத்தோரணாய
ஆகர்ஷ்ய - ஆவேஸ்ய ,
ஆவேஸ்ய - மோஹய ,
மோஹய - ப்ராமய ,
ப்ராமய - பாஷய ,
பாஷய - சீக்ரம் ,
பாஷய - ஹ்ராம் திரிபுரதாண்டவாய
அஷ்டபைரவாய - பாஷய நமஹ .

ஓம் நமோ பகவதே விஜய பைரவாய
சர்வ சத்ரு லோகோவினாசனாய
விதுரதாஹ – தாரயதாரய
நரருது மாம்ச பட்சணாய
தேவதத்தம் உச்சாடயோ ,
உச்சாடயோ - தாடய , தாடய ,
சம்ஹர , சம்ஹர , பஸ்மி , குரு குரு நமஹ . 




பைரவரருள் 

Monday, September 16, 2013

பைரவ வழிபாடு


அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிய பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். ஆதிசங்கரர் தான் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீபைரவ வழிபாடாகும்.

பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். பைரவ மூர்த்திகளில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும். 

நள்ளிரவு வழிபாடு:

பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த காலத்தில் பராசக்தி பைரவி என்றும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் பெருமான் பைரவனாக வீற்றிருக்கின்றார். பரம ஞானிகளும் யோகிகளும் தமது தூக்கத்தை விடுத்து அந்த வேளையில் தியானத்தில் திரிபுரா பைரவியையும், பைர வரையும் தியானிக்கின்றனர்.

அபிராமி பட்டர் `யாமம் பைரவர் ஏத்தும் பொழுது' என்று பாடுகின்றார். தொடர்ந்து விழிப்புணர்வோடு வேண்டுபவருக்கு, நள்ளிரவில் திருவடி தரிசனம் தருபவள் பைரவி என்று அருளுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். யாமம்-நள்ளிரவு. சீர்காழியில் வடுகநாதருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

வழிபாடு:

அனைத்து சிவாலயங்களிலும் சிவபூஜை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த சாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. ஆலயத்தின் வடகிழக்கு முனையில் பைரவரும், தென்கிழக்கு முனையில் சூரியனும் அமைத்து வழிப்படப்படுகின்றனர்.

அபூர்வமாகச் சில தலங்களில் பைரவ மூர்த்திக்குத் தனிச்சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். பைரவருக்குப் பிரியமானவை நெய் அபிஷேகம், சிவப்பு மலர்கள், நெய் தீபம், உடைக்கப்படாத முழுத்தேங்காய், மாவிளக்கு, நார்ப்பழங்கள், சிவப்பு வண்ணம் தோய்ந்த கல்யாண பூசணிக்காய், தேன், வடை, அவித்த உணவுகள் முதலியவையாகும்.

பிரம்மோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும். அபூர்வமாகச் சில தலங்களில் ஆறு எட்டு கரங்கள் கொண்ட பைரவரைக் காண்கிறோம். பத்து, பதினாறு கரங்களுடன் கூடிய பைரவரும் உள்ளார்.

சிவாலயங்களில் பைரவர் மேற்கு நோக்கி இருப்பது உத்தமம் என்றும் தெற்கு நோக்கியிருப்பது மத்திமம் என்றும், கிழக்கு நோக்கியிருப்பது அதமம் என்று பிரதிஷ்டா நூல் குறிக்கின்றன.

நன்றி மாலைமலர் ! 

Friday, September 13, 2013

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்


விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில்

(கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

நன்றி மாலைமலர் ! 

பைரவர் பரிகாரங்கள்

பணக் கஷ்டம் நீங்கிட :-



மண் அகலில் தாமரைத் திரி போட்டு ,நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லதுபெர்ளணமி அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவபூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும் . கோவிலில் இருக்கும்பைரவருக்கு , வீட்டில் பூஜையைத் துவக்குவதற்கு முன் ,சந்தனக் காப்புசெய்து ,சம்பங்கி மாலை அணிவித்து ,புனுகு பூசி , பால் பாயசம் ,நெல்லிக்கனி , ஆரஞ்சு ,வறுத்த கடலை , பருப்பு பொடி கலந்த அன்னம்இவைகளை நிவேதனம் செய்து ,வில்வ மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு ,பிறகு , விட்டில் ஏற்றி வைத்த தீபத்தின் முன் அமர்ந்து , கீழ்க்கண்ட ஸ்ரீசொர்ண பைரவர் காயத்திரியை 330 முறை படித்துவிட்டு , பைரவர் 108போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் .

மாங்கல்ய தோஷம் நீங்க :-


தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ , அதனால்தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள்செவ்வாய் கிழமை எமக்கண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து ,விரலி மஞ்சள் மாலை சூட்டி , மஞ்சள் கயறு                   ( தாலிக் கயறு ) சமர்ப்பித்து ,சர்க்கரைப் பொங்கல் , பால் பாயசம் , பானகம் , நிவேதனம் செய்து , சகசுமங்கலிப் பெண்களுக்கு , மஞ்சள் குங்குமம் , ஜாக்கெட் துணிவுடன் வசதிஇருந்தால் புடவையும் கொடுத்து , பைரவரை வழிபட வேண்டும் .

இழந்த பொருள் கிடைக்க :- 


மானம் , மரியாதை , கௌரவம் , இடம் , சொத்து போன்ற நீங்கள் இழந்தபொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட , பைரவர் முன் 27 மிளகைமூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு , வராகிக்கு முன் சிறிது வெண்கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும் .



பைரவரருள் !