Tuesday, March 1, 2011

இன்று மகா சிவராத்திரி

 இன்று மகா சிவராத்திரி, சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இரவு ஐந்து கால பூஜைகள் நடைபெறும்.
முதலில் உலகத்தின் அமைதி மற்றும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமம் செய்வார்கள். அதன்பிறகு ஐந்துகால பூஜைகள் நடைபெறும்.
முதல் கால பூஜை மாலை 5.30 மணிக்கு ஆரம்பாமாகும்.

முதல் கால யாமத்தில் - பஞ்ச கவ்விய அபிஷேகம், பொங்கல், நிவேதனம், வில்வத்தினால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்
இரண்டாவாது கால பூஜை இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், பாயாச நிவேதனம், தாமரை மலரால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்.
மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகும்.
மூன்றாம் யாமத்தில் தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்து நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்.
நான்காவது கால பூஜை இரவு 2.30 மணிக்கு ஆரம்பமாகும்
நான்காம் யாமத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம், வெண்பொங்கல் நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்.
ஐந்தாவது கால பூஜை அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.
சிவபெருமனை தரிசித்து சிவராத்திரி பூஜையை நிறைவு செய்வார்கள்.

No comments: