Tuesday, August 16, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 4




திருப்பத்தூர் என்ற பெயர் வந்ததற்கான காரணம்
கொள்ளையனாக இருந்த வால்மீகி, தன் தவறை உணர்ந்து சிவபெருமானை நினைத்து பைரவர் இருக்கும் இடத்தில் தவம் செய்தார். பல வருடங்களாக தவம் செய்ததால் வால்மீகி முனிவர் உடலை கரையான் புற்று கட்டியது. இனியும் வால்மீகியை சோதித்து அமைதியாக இருப்பது நன்மையல்ல. என்று ஈசன் கருதி வால்மீகிக்கு நேரில் காட்சி தந்து, “வால்மீகி” என்று முதலில் சிவபெருமான்தான் அவருக்கு பெயர் வைத்து அழைத்தார். சிவனின் குரல் கேட்டு வால்மீகி முனிவர் புற்றை உடைத்து கொண்டு வெளியே வந்தார்.
“வால்மீகி நீ புற்றில் இருந்து வந்ததால் உன் பெருமை நிலைத்து இருக்க, இந்த இடம் புத்தூர் என்ற பெயர் பெறட்டும்.” என்றார் சிவபெருமான். அதுவே இன்று திருப்பத்தூர் என்று நாம் அழைக்கிறோம்.

கோயில் உருவான கதை
அரசர் ஒருவர்  நாய் வாகனம் இல்லாத யோகபைரவர் இருப்பதாக கேள்விப்பட்டு இந்த காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தார். யோக பைரவரை கண்ட அரசர், இறைவனுக்கு திருக்கோயில் கட்டினார்.
பரிகாரம்
தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையில் இருந்து விடுதலை அடைய யோக பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையில் இருந்து விடுதலை பெறவும், திருமணம் நடக்கவும் இந்த யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். நல்ல வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் 9 வாரம் யோக பைரவருக்கோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பைரவர் கோயிலுக்கோ, சூரியனுக்கு உகந்த ஞாயிற்று கிழமையில் விளக்கு ஏற்றலாம். திருமணம் தடைப்பட்டவர்கள் 9 வாரம் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றினால் நல்ல வரன் அமையும்.  

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

No comments: