Friday, August 26, 2011

சொர்ணாகர்சன பைரவ மந்திரம்


சுவர்ணாகர்சன பைரவ மந்திரம்
ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ


பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் பொற்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தினுள்ளே எழுந்தருளியுள்ள பைரவர் சுவர்ணாகர்சன பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

உற்சவத்திருமேனியாக உள்ள இப்பைரவப் பெருமான் நிர்வாண கோலத்தில் நின்றவாறு மேற்கரங்களில் பாசம், டமருகமும், கீழ்கரங்களில் சூலம், கபாலமும் மேல்நோக்கிய அக்னி கேசத்துடன் அவருடைய இடப்பாகத்தில் அடியார்களை நோக்கியவாறு உள்ள நாய் வாகனத்துடன் திருக்காட்சியளிக்கிறார்.

இவருக்கு இங்கே உச்சிக்காலத்தில் நெய், பால், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து நெய்யில் செய்யப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.

முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை. அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம். பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம்.

சுவர்ணாகர்சன மந்திரம்
ஸ்வர்ணகால பைரவம் திரிசூலயுக்த பானினம்
வேத ரூப ஸார மேல ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரிதேஷூ ஸர்வதா ஸமஸ்த்வஸ்து தாயினம்
மகீந்த்ரீவம்ச பூர்வ புண்ய ரூபிஸம் ஸமாச்ரயே

சுவர்ணாகர்சன பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டம், பெளர்ணமி, பிரதோஷகாலம், திங்கட்கிழமை சந்தியாகாலம், திருவாதிரை நட்சத்திர நாள் உகந்த நாட்கள்.

சம்பங்கி மாலை, தாமரைப் புஷ்பமாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை, அணிவித்து வாசனை மலர்களாலும் செவ்வரளி, ரோஜா மஞ்சள் செவ்வந்தி, மரு, மரிக்கொழுந்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். மல்லிகை மலரை பைரவ வழிபாட்டில் தவிர்க்கவும்.

நைவேத்தியமாக வெல்லப் பாயசம், சர்க்கரைப்பொங்கல், நெய்யில் சுட்ட வடை, அவல் பாயாசம், பானகம், சம்பா அரிசிச் சாதம், பழங்கள், தேன், பால் படைத்து வழிபாடு செய்ய அனைத்து வளங்களும் இல்லம் தேடி தானாய் வரும்.

சுவர்ணாகர்சன பைரவரை வழிபட விரும்புபவர்கள் இவரது திருவுருவப் படத்தை குபேரனின் திசையான வடக்கு திசையில் வைத்து, வடக்கு  நோக்கி அமர்ந்து பூஜிக்க சர்வ தனங்களையும் ஆகர்சித்து வழங்குவார்.


சுவர்ணாகர்சன தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசூலம் வரம் கைரை:
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த சுவர்ணவர்ஷனம்
சுவர்ணாகர்சனம் பைரவம்
ஆஸ்ரயாம்யஹம்.

நன்றி ! பைரவர் ஃபவுண்டேசன் 

No comments: