Thursday, May 19, 2011

Swarna Bairavar Worship



சொர்ண பைரவர் வழிபாடு 



நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது கொடுத்த கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?
அல்லது
தொழிலில் நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா?(மின்சாரம் வரும் லட்சணத்துக்கு இதை வேற குத்திக்காட்டணுமா? எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) 
அல்லது 
உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா
அல்லது 
அரசியலில் நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?
  
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னிதியில் வழிபட வேண்டும்.  
 
அடுத்தவாரம்  25.5.2011 புதன் கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.
 
பின்வரும் தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள்
அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர் சன்னிதி இருந்தால் தகவல்
தெரிவிக்கவும்)
 
இந்த சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று
இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத் துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை
அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில
நாட்களில் உணரலாம்.

திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும் பெரியகடைவீதியில் உள்ள ஸ்ரீ சொர்ண பைரவநாதர், திருக்கோவில். 
 
படப்பை ஸ்ரீஜெயதுர்கா பீடம்,
 
காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,
 
சிதம்பரம் கனகசபை,
 
திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,
 
திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர
ராஜப்பெருமாள் கோவில்,
 
தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம் அருகே,
 
இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள் ஆலயம்(தாலுகா
அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)
 
ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும்
கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை
 
24.5.11 செவ்வாய்கிழமை  மதியம் மணி 2.26 இல் இருந்து 25.5.11 புதன்கிழமை மாலை 4.12 வரை  அஷ்டமி இருப்பதினால் செவ்வைகிழமையன்று  மாலை 3.00pm முதல் 4.30pm   மற்றும் புதன்கிழமையன்று 12.00 pm  முதல் 01.30 pm ஆகிய ராகு காலங்களில்  சொர்ண ஆகர்ஷண பைரவர் பூஜயில் கலந்து கொள்ள விரைவான,சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
 
அடுத்த தேய்பிறை அஷ்டமி 23.06.11 வியாழக்கிழமை.தயாராக இருக்கவும்.

நன்றி !!!

No comments: